×

மதிமுக ஆண்டு விழா

ராஜபாளையம், மே 7: ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில், மதிமுகவின் 26ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். பேரூர் மதிமுக செயலாளர் அய்யனப்பன் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில், மா.தொ.செயலாளர் காதர்மைதீன், மாவட்ட பிரதிநிதி குருசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மலைக்கனி, ஒன்றிய பிரதிநிதி குருபுத்திரன், துரைச்சாமி, சுப்புலட்சுமி முருகதாஸ், ஒன்றிய துனைச்செயலர் முருகன் மற்றும் மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : MDM Year Anniversary ,
× RELATED வணிகர் சங்க கூட்டம்