×

செண்பகத்தோப்பு வனப்பகுதியில் மழையின்றி வறண்ட அருவிகள்

திருவில்லிபுத்தூர், மே 7: திருவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு வனப்பகுதியில் மழையின்மையாலும், கடுமையான வெயிலின் தாக்கத்தாலும் அருவிகள், ஓடைகள் வறண்டு கிடக்கின்றன. திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சிமலை செண்பகத்தோப்பு வனப்பகுதியில் மீன்வெட்டி பாறை அருவி, பேச்சியம்மன்கோயில் அருகே நீர்வரத்து ஓடைகள், சறுக்குபாறை அருவி என பல்வேறு அருவிகளும், ஓடைகளும் உள்ளன. இந்நிலையில், மழையின்றியும், கடுமையான வெயில் தாக்கத்தாலும் இப்பகுதியில் உள்ள அருவிகள், ஓடைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. அருவிகள், ஓடைகளில் நீர்வரத்து இருந்தபோது ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். தற்போது அவர்களின் வருகை குறைந்துள்ளது. மழை பெய்து அருவிகள், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால்தான் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Tags : forest ,Shenbagathoppu ,
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு