×

கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த மிளா மான் பலி

கூடலூர், மே 7:  கூடலூர் வனப்பகுதி அருகே தனியார் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த மிளா மான் பலியானது. தேனி மாவட்டம் கூடலுார் வனப்பகுதி கப்புவாமடை பகுதியில் மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட விலங்குகள் அதிகம் உள்ளன. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள வெட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில், நேற்று முன்தினம் இரவு மிளாமான் ஒன்று தவறி விழுந்தது.நேற்று காலையில் இதைப்பார்த்த விவசாயிகள், கூடலுார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனவர்கள் சிவலிங்கம், குமரேசன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மிளா மானை மீட்டனர். மீட்கும்போது அது இறந்தது தெரிய வந்தது. கால்நடை டாக்டர் உலகநாதன் மருத்துவ பரிசோதனை செய்தார். இது ஒன்றரை வயதுடைய பெண் மிளா மான் எனவும், கிணற்றுக்குள் விழுந்த மான் தண்ணீருக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் இறந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் கூடலுார் வன அலுவலகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Fallen Mila ,well ,Kodalur ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...