×

உழவர்சந்தை அதிகாரி எச்சரிக்கை வீரபாண்டி திருவிழாவில் கடைகள் வைக்க அனுமதி கேட்டு நரிக்குறவர்கள் போராட்டம்

தேனி, மே 7: தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா எட்டு நாட்கள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவைக்காண தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.பக்தர்களின் வருகையை பயன்படுத்தி வியாபாரம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் வீரபாண்டியில் திருவிழா பகுதியில் நரிக்குறவர்கள் பேன்சி பொருள்கள் அடங்கிய கடைகள் அமைப்பது வழக்கம். இவ்வாண்டும், திருவிழா பகுதியான நெடுஞ்சாலையில் கடைகள் அமைக்க முயன்ற நரிக்குறவர்களை கோயில் நிர்வாகம், உப்புக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் மறுத்து விட்டது. இதனால் நரிக்குறவர்கள் தாங்கள் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என கூட்டமாக கூடி வீரபாண்டி பைபாஸ் சாலை அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கோயில் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Tags : plaintiffs ,festival ,Alappuzha Veerapandi ,shops ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!