×

பரமக்குடி அரசு கல்லூரியில் முதல்கட்ட மாணவர் சேர்க்கை துவக்கம்

பரமக்குடி, மே 7: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான முதல்கட்ட சேர்க்கை நேற்று தொடங்கியது.பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்,ஆங்கிலம்,வணிகவியல் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்பட 11 பட்டபடிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளுக்கு கடந்த 20 நாட்களாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சிலிங்கை கல்லூரி முதல்வர் பூர்ணசந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இன்று அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான பிஎஸ்சி கணிதம், வேதியியல், உயிர் வேதியியல்,கணினி அறியவியல் துறைக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.
நாளை வணிகவியல் மற்றும் நிர்வாக மேலாண்மை ஆகிய பாடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். அதுபோல் வரும் 9ம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கவுன்சலிங் நடைபெறும். நேற்று நடைபெற்ற முதல்கட்ட கவுன்சிலிங்கில் துறைத்தலைவர்கள் மணிமாறன், கணேசன்,கண்ணன், ரேணுகா, அறிவழகன் (பொறு) நிஷா, செந்தில்குமார்,மோகன கிஷ்ணவேணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : student student ,Paramakudi Government College ,
× RELATED பரமக்குடி அரசு கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கு