முறைகேட்டை விசாரிக்க விவசாயிகள் வலியுறுத்தல் அச்சுறுத்தும் அக்னி வெயில்

ஆர்.எஸ்.மங்கலம், மே 7: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உப்பூர், திருப்பாலைக்குடி சோழந்தூர் ஆனந்தூர் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு இப்போதே கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ளது. காரணம் கடந்த 3 ஆண்டுகளாக மழை தண்ணீர் இல்லாத காரணத்தால் கண்மாய், குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் போய் விட்டது. இதனாலும் எங்கு பார்த்தாலும் ஒரே கருவேல மரங்கள் மண்டி இருப்பதாலும் வெப்பம் மிகுதியாகவே காணப்படுகிறது.தற்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படியே வெளியில் வந்தால் ஏதாவது குளிர்பானங்களையும், தண்ணீரையுமே குடிக்க தோன்றுகிறது. இவற்றை விட தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை உடல் நலத்திற்கு நல்லது என்றாலும் இளநீர் விலை அதிகமாக உள்ளது என்பதால் ஏழை, எளிய மக்கள் வாங்கி தங்களது தாகத்தை தீர்ப்பதற்கு தர்பூசணி, நுங்கு ஆகியவை சிறந்ததாக உள்ளதால் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தர்பூசணி, நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெப்பத்தை தணிக்கும் நுங்கு உடல் நலத்துக்கு மிகவும் சிறந்தது மட்டுமின்றி குறைந்த விலையில் கிடைப்பதால், மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

Related Stories: