×

காடையாம்பட்டி அருகே அரசு திட்டத்தில் கட்டி முடிக்கப்படாத வீடுகள்

காடையாம்பட்டி, மே 7: காடையாம்பட்டி அருகே, விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு திட்டத்தில் வீடுகள் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காடையாம்பட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டி, தும்பிபாடி, பொட்டியபுரம்  ஆகிய கிராமங்களில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை, விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குடியிருப்பு பகுதியில் உள்ள நிலங்களை எடுக்கும் பொதுமக்களுக்கு, அரசே புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தை தொடங்கி, வீடு கட்டும் பணிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், காடையாம்பட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டி ஊராட்சியில், விமான நிலையத்திற்கு எதிரே உள்ள 2 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களாக கட்டுமான  பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலம் கொடுப்பதாக அரசுக்கு எழுதி கொடுத்த குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், வீடு கட்டும் பணி பாதியில் நிற்பதால் தங்களுக்கு வீடுகள் கிடைக்குமா என்ற சந்தேகம் அடைந்துள்ளனர்.

Tags : Houses ,project ,Government ,Kodiyamampatti ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்