×

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருச்செங்கோடு, மே 7:  திருச்செங்கோடு அடுத்த மோர்ப்பாளையம்  வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இப்பள்ளி மாணவி  சௌமியா, 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம்  பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் பாடவாரியாக தமிழில் 96, ஆங்கிலம் 98, கணிதம் 99, அறிவியல் 97, சமூக அறிவியல் 100 பெற்றுள்ளார். மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை, கல்வி நிறுவனத் தலைவர் முருகன், செயலர் குணசேகரன், தாளாளர் சிங்காரவேல், மேலாண்மை இயக்குநர்கள் ராமலிங்கம், முத்துசாமி, அறங்காவலர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி பழனியப்பன், இயக்குநர்கள் சீராளன், ஞானசேகரன் மற்றும் அறங்காவலர்கள், பள்ளி முதல்வர் மதலைமேரி, ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : Vidhya Vikas Matriculation School ,
× RELATED எருமப்பட்டி வட்டாரத்தில் வெறிநாய்கள்...