×

மாவட்ட கால்பந்து போட்டி திண்டுக்கல் அணிகள் அசத்தல்

திண்டுக்கல், மே 7: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 2018-2019க்கான தொடர் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகள் அனைத்தும் டிவிஷன் அடிப்படையில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல்  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் பிரீமியர் டிவிஷன் போட்டியில் காரநேசன் கால்பந்து அணி மற்றும் ஆர்ட்ஸ் கால்பந்து அணியும் மோதின. இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. இதனை தொடர்ந்து ராக்போர்ட் கால்பந்து அணி மற்றும் ஸ்டார் சோலார் கால்பந்து அணியும் மோதின. இதில் ராக்போர்ட் அணி 3 கோல் அடித்து வெற்றி பெற்றது.
 
இதையடுத்து சோலார் கால்பந்து அணி மற்றும் லயோலா கால்பந்து அணியும் மோதின. இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை முடிவுபெற்றது. இதையடுத்து நடைபெற்ற ஐந்தாம் டிவிசன் போட்டியில் அன்னை ஸ்போர்ட்ஸ் கால்பந்து அணி மற்றும் பட்டுமணி நினைவு கால்பந்து அணியும் மோதின.இதில் அன்னை ஸ்போர்ட்ஸ் அணி 3 கோல் அடித்து வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஜிஎஸ் கால்பந்து அணி மற்றும் அரசன் கால்பந்து அணியும் மோதின. இதில் ஜிஎஸ் அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாம் டிவிசன் போட்டியில் ஜூனியர் சோலார் கால்பந்து அணி மற்றும் ஞானம் நினைவு கால்பந்து அணியும் மோதின. இதில் ஜூனியர் சோலார் அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் டிவிசன் போட்டியில் ரமேஷ் முருகன் நினைவு கால்பந்து அணி மற்றும் வேடசந்தூர் கால்பந்து அணியும் மோதின. இதில் ரமேஷ் முருகன் அணி 6 கோல் அடித்து வெற்றி பெற்றது. இத்தகவலை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்


Tags : District football match ,Dindigul ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்