கிறிஸ்து அரசர் ஆலயத்தில் புது நன்மை, உறுதி பூசும் விழா

நாமக்கல், மே 7: நாமக்கல், கிறிஸ்து அரசர் ஆலயத்தில் புது நன்மை மற்றும் உறுதி பூசுதல், பட்டமளிப்பு விழா கொண்டாடப்பட்டது. இதற்கு சேலம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் சிங்கராயர் தலைமை வகித்து, திருச்சபை பணிகளில் ஈடுபடுவதற்காக 52 சிறுவர், சிறுமிகளுக்கு புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் பட்டமளித்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் பங்கு தந்தை ஜான் அல்போன்ஸ் மற்றும் உதவி பங்கு தந்தை அருள்சுந்தர் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: