×

கொடைக்கானல் அரசுப்பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்

கொடைக்கானல், மே 7: கொடைக்கானல் அருகே வில்பட்டி அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கொடைக்கானல் அருகே வில்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமாகியுள்ளது. இந்த சுவரை ஒட்டி கீழே பிரதான சாலை உள்ளது. இந்த சுற்றுச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சுவரை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodikanal ,
× RELATED கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு...