×

லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தல் தலைவர் வாங்கிலி அணியில் போட்டியிட்ட 44 பேரும் வெற்றி

நாமக்கல், மே 7:  நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில், தலைவர் வாங்கிலி அணியில் போட்டியிட்ட 44 பேரும் செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளனர். நாமக்கல்  தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் தலைவர், உதவி தலைவர், பொருளாளர்,  இணைச்செயலாளர் மற்றும் 50 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு, நேற்று  முன்தினம் தேர்தல் நடந்தது.  மொத்தமுள்ள 4,792 வாக்குகளில் 3,811 வாக்குகள் பதிவானது. நேற்று  முன்தினம் இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில்,  தற்போதைய தலைவர் வாங்கிலி தலைமையில் போட்டியிட்ட உதவி தலைவர்  சுப்புரத்தினம், பொருளாளர் சீரங்கன், இணைச் செயலாளர் மயில்ஆனந்த் ஆகிய 4  பேரும்,  மீண்டும் அதே பதவிக்கு தேர்வு பெற்றனர். வாங்கிலி 2வது முறையாக  தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், 50 செயற்குழு உறுப்பினர் பதவிக்கான  வாக்கு எண்ணிக்கை முடிவில்,  வாங்கிலி அணியில் 44 பேர்  வெற்றி பெற்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பெயர் விபரம்: அருள்ராஜ்,  சண்முகசுந்தரம், காளியப்பன், காளிமுத்து, சந்திரசேகரன், தனபால், அன்பழகன், ஈஸ்வரன், அன்பழகன், பாலசந்திரன், குமாரசாமி, சிவக்குமார்,  சம்பத்குமார், செந்தில்ராமன், பழனிசாமி, சரவணன், செல்வராஜ், சுப்ரமணியன், பொன்னுசாமி, சரவணன், சுப்ரமணி, பொன்னுசாமி,  செந்தில், சுப்ரமணியம், செல்வராஜூ, பாலசுப்ரமணி, சுப்ரமணி,  செந்தில்குமார், ஜெய்குமார், ராஜா, வெங்கடாசலம், நடராஜன், பால்ராஜ்,  சுரேஷ்குமார், மாரப்பன், நந்தகுமார், பாண்டியன், செல்வம், பாண்டியரசு,  பூமுரளி, ராஜா, மாதேஸ்வரன், ஜெயக்குமார், பிரகாஷ்பாபு, ராமதாஸ்,  பாஸ்கர், செந்தில், குமார், ராமலிங்கம், சதீஸ். வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தேர்தல் குழுத்தலைவர்  பொன்னம்பலம், அதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது  ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன், எல்பிஜி டேங்கர் லாரி  உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக், பொருளாளர் கணபதி, மற்றும்  தேர்தல்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

சர்ச்சைகளை முறியடித்த தேர்தல் குழு

நாமக்கல்  தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தேர்தல் எந்த முறையும் இல்லாத அளவுக்கு,  இந்த முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேட்பு மனு தாக்கலின் போது,  தற்போதைய செயலாளர் அருளின்  வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் குழுவின்  நடவடிக்கைகளை ஒருதரப்பினர் விமர்சனம்  செய்ய தொடங்கினர். நிர்வாகிகள் மீது வாட்ஸ் அப்பில் அவதூறு  பிரசாரம் செய்யப்படுவதாக போலீசிடம் புகாரும் அளிக்கப்பட்டது.  வாக்குபதிவின் போதும், இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு  ஏற்பட்டது.

இப்படி பல  சர்ச்சைகளை ஏற்படுத்திய தேர்தலை மிகவும்  அமைதியாகவும், சங்க விதிமுறைப்படியும் நேர்மையாக தேர்தல் குழு தலைவர்  பொன்னம்பலம் நடத்தினார். இதுபோல  வாக்கு எண்ணிக்கையும் மிக நேர்மையாக  நடத்தி தேர்தல் முடிவுகளை  அறிவித்தார். பல  சர்ச்சைகளை தேர்தல் குழு முறியடித்து, நேர்மையாக தேர்தலை நடத்தி முடித்துள்ளது.

Tags : Wanky ,team ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா