×

திருச்செங்கோட்டில் பூத்துள்ள அபூர்வ கிருஷ்ண கமலப்பூ

திருச்செங்கோடு,  மே 7: திருச்செங்கோடு  குஞ்சு மாரியம்மன் கோயில் அருகில் வசிப்பவர் பிரகாசம். இவர் தனது வீட்டில்  அபூர்வமான கிருஷ்ண கமலப்பூ செடி வளர்த்து வருகிறார். இந்த  செடியில் நேற்று கிருஷ்ண கமலப்பூ பூத்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள், பிரகாசத்தின் வீட்டிற்கு சென்று இந்த பூவை  பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து பிரகாசம் கூறுகையில், ‘கிருஷ்ண கமலம் பூவின் மேற்பகுதியில் உள்ள 3  இதழ்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளையும்,  அடுத்துள்ள 5 இதழ்கள் பஞ்ச  பாண்டவர்களையும், அதன் கீழுள்ள நூறு இதழ்கள் துரியோதனன் சகோதரர்களான கௌரவர்களையும், கடைசியாக  உள்ள 10  இதழ்கள் தசாவதாரத்தையும் குறிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.  எனவே, இந்த பூவை, மகாபாரத பூ என்றும் கூறுவார்கள். அபூர்வமாக பூத்துள்ள  இந்த பூவை  பலர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்,’ என்றார்.

Tags : Apoorva Krishna Kalamapoo ,Tiruchengode ,
× RELATED பொறுப்பேற்பு