×

காவேரிப்பட்டணம் அருகே வேனில் கடத்தப்பட்ட குட்கா சிக்கியது

காவேரிப்பட்டணம், மே 7: காவேரிப்பட்டணம் அருகே வேனில் கடத்தப்பட்ட ₹1.50 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதர் உத்தரவின்பேரில், டிஎஸ்பி பாஸ்கர் மேற்பார்வையில், காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் போத்தாப்புரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி வேனை நிறுத்துமாறு சைகை செய்தனர். இதனைக்கண்டதும் வேனை அப்படியே நடுரோட்டில் நிறுத்தி விட்டு டிரைவர் ஓட்டம் பிடித்தார்.

இதனால், சந்தேகத்திற்குள்ளான போலீசார் அந்த வேனில் சோதனையிட்டனர். இதில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வேனுடன் 22 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றி வேலூரில் இருந்து வந்த உணவு பாதுகாப்பு தடுப்பு அதிகாரி சிவமணியிடம் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ₹1.50 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Gudka ,Van ,Kaveripattinam ,Vanni ,
× RELATED வியட்நாமை உலுக்கிய நிதி மோசடி வழக்கு; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை