×

மதுரை மீனாட்சி கோயிலில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

மதுரை, மே 7: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மழைநீர் கால்வாய் கட்டுவது தொடர்பாக அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் கடந்தாண்டு மழை பெய்தபோது, கிழக்கு கோபுரவாசல் வழியாக மழைநீர் புகுந்தது. இதனால் கோயிலுக்குள் மழைநீர் குளம் போல் தேங்கியது. மழைநீரை வெளியேற்ற கால்வாய் வசதியில்லாததால், கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது தெரியவந்தது.இந்நிலையில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ேகாயிலில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் கட்டுவதற்கு மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் நேற்று ஆய்வு நடந்தது. 4 கோபுரவாசல் பகுதிகளில் நடந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : corporation ,Madurai Meenakshi temple ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு