×

ரூ.7 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, மே 7: அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று  ரூ.7 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்  நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 330 நிலக்கடலை மூட்டைகள் வந்திருந்தன. குவின்டாலுக்கு முதல் ரகம் (காய்ந்தது) ரூ.5,450 முதல் ரூ.5,630 வரையிலும், இரண்டாவது ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.5180 முதல் ரூ.5,310 வரையிலும்,  பச்சை ரக நிலக்கடலை குவின்டாலுக்கு ரூ.4,300 முதல்ரூ.4,600 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்துக்கு  ஏலம் நடைபெற்றது.  ஏலத்தில்  மலையப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம், அன்னூர், மங்கரசவலையபாளையம், புளியம்பட்டி, சேவூர், நம்பியூர் ஆகிய பகுதிகளில் இருந்து 6 விவசாயிகளும், திருச்செங்கோடு, மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து 16 வியாபாரிகளும் பங்கேற்றனர்.

Tags : Groundnut auction ,
× RELATED சேவூர் விற்பனைக் கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்