×

வடமாநில தொழிலாளர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று பணியில் சேர்க்க வலியுறுத்தல்

திருப்பூர், மே 7: திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களை பணியில் சேர்க்கும் போது, அவர்களின் முழு விவரங்கள் அடங்கிய ஆவணங்ளை பெற்ற பின்பே பணியில் சேர்க்க நிறுவன உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  இதுகுறித்து நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:  திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். குறிப்பாக பீகார், ஒரிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் எந்த மாநிலம், எந்த மாவட்டம் என்பது கூட தெரியாது. வேலைக்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என்கிற நிலையில் திருப்பூர் உள்ளது. திருப்பூரில் கொலை கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப திருப்பூர் நகரில் போதிய போலீசாரும் இல்லை. பட்டப்பகலில் வழிப்பறி செய்வது போன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது. ஏராளமான தொழிலாளர்கள் உள்ளதால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும், குற்றவாளிகளும் தொழிலாளர்கள் என்ற போர்வையில் தப்பித்து விடுகின்றனர். வடமாநிலங்களில் பெரிய அளவில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, தொழிலாளர் போர்வையில் திருப்பூரில் பதுங்கி விடுகின்றனர். அதேபோல், இங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிடுகின்றனர்

Tags : Northern Workers ,
× RELATED போதையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட...