×

டெஸ்ட் டியூப் முறையில் 15 குழந்தைகள் பிறப்பு திருத்துறைப்பூண்டி அனன்யா கருத்தரிப்பு மையம் சாதனை

திருத்துறைப்பூண்டி, மே 7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் கடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக டாக்டர் பி.கே.தமிழரசி மருத்துவமனை (பி.கே.டி நர்சிங் ஹோம்) மகளிர் நலம். குழந்தை நலம் மற்றும் பொதுநல மருத்துவத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இதன் ஒரு அங்கமான அனன்யா கருத்தரிப்பு மையம் மற்றும் சோதனைக்குழாய் குழந்தை மையம் திருத்துறைப்பூண்டி, பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சன்னதி தெருவில் தொடங்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

10 முதல் 15 ஆண்டுகள் தாய்மை அடையாமல் பல்வேறு இன்னல்கள் அனுபவித்து கொண்டிருந்தவர்களுக்கு அனன்யா கருத்தரிப்பு மையம் மூலம் டெஸ்ட் டியூப் முறை, மாத்திரை மற்றும் ஐயூஐ முறையில் இதுவரை 300  குழந்தைகள்பிறந்துள்ளது. மருத்துவர்களின் சீரிய முயற்சியால் டெல்டா மாவட்டத்தில்   செயற்கை கருவூட்டல் முறையிலும், மாத்திரை மற்றும் ஐயூஜ முறையில் வெற்றிகரமாக நடந்துள்ளது. தற்போது  6 தம்பதிகளில் இரட்டை குழந்தைகள் 12 குழந்தைகளும்,  மூன்று தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் என மொத்தம் 15 குழந்தைகள் பிறந்துள்ளது.

இனி குழந்தை பேறு சிகிச்சைக்கு வெளியூர் செல்ல தேவையில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள அனைத்து  நவீன வசதிகள் குறைந்த கட்டணத்தில் நமது ஊரிலேயே கிடைப்பதாக அனன்யா கருத்தரிப்பு மைய உரிமையாளர்கள் டாக்டர்கள் சருண், இந்துமதி சருண்  ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags : birth ,Thiruthuraipoondi Anyaya Concentration Center ,
× RELATED புதுக்கோட்டை அருகே மந்திரவாதி பேச்சை...