×

திருத்துறைப்பூண்டியில் பொது தேர்வில் சாதனை அரசு பள்ளிக்கு பாராட்டு தெரிவித்து பிளக்ஸ் போர்டு

திருத்துறைப்பூண்டி, மே 7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1914ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது நூற்றாண்டை கடந்து விட்டது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள், இன்ஜினியர்கள், திரைப்படத்துறை உள்ளிட்ட அரசு மற்றும் அரசு சாரா அமைப்பு, நிறுவனங்களில் உயர்பதவி வகித்து வருகின்றனர்.

இந்தபள்ளியில் 1978ம் ஆண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 81 சதவிகிதம் தேர்ச்–்சி பெற்றுள்ளது. இதே போன்று 40 ஆண்டுகளுக்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவிகிதம் பெற்றுள்ளது. நூறு சதவிகிதம் தேர்ச்சி இல்லை என்றாலும் பல ஆண்டுகளுக்கு பிறகு தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்துள்ளதால் பள்ளியை பாராட்டி பள்ளி முன்பு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலை மெயின்ரோட்டில் பள்ளி உள்ளதால் இந்த வழியாக செல்பவர்களெல்லாம் பல ஆண்டுகளுக்கு பிறகு பிளக்ஸ் போர்டு வைத்துள்ளதால் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்று நினைத்து படித்து செல்கின்றனர்.

Tags : Blues Board ,public school ,Thiruthuraipothy ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்