×

தி.பூண்டி நாகை பைபாஸ் சாலை அருகில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ஓடும் அவலம்

திருத்துறைப்பூண்டி, மே 7: திருத்துறைப்பூண்டி நாகை பைபாஸ் சாலை அருகில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ஓடுகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகர பகுதியில் தினந்தோறும், கிராம பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் பல இடங்களில் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுவது குறித்தும் அடிக்கடி தினகரனில் செய்தி வெளியிட்ட பிறகு சரி செய்யப்படும்.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நாகை பைபாஸ் சாலை அருகில் ஒரு இடத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் பைப்லைன் வால்வு திறக்குமிடத்தில் தினந்தோறும் தண்ணீர் வீணாக ஓடுவதால் அந்த இடத்தில் இலவச கழிப்பறை போன்று பயன்படுத்துகின்றனர். மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

அதேபோன்று அதனருகிலேயே வேறு ஒரு இடத்தில் பைப லைன் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இதுபோன்று பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், மேலும் பைப்லைன் உடைப்பினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Pumpi Nagai Bypass ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி