நீடாமங்கலம் அருகே பரிதாபம் வாகனம் மோதி தொழிலாளி பலி

நீடாமங்கலம், மே 7: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள காரிச்சாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சூசைநாதன்(59). இவர் குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ராயபுரம் பாலம் அருகில் வந்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். பிறகு தென்னை கீற்று முடையும் தொழிலை மனைவி செபஸ்தியம்மாள் உதவியுடன் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு மன்னை செல்லும் நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.

அப்போது நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்சில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூசைநாதன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : car crash ,river ,
× RELATED கார் மீது ஆட்டோ மோதல் மாணவர்கள் காயம்