×

சொத்தை பிரித்து எழுதி வாங்கி கொண்டு வீட்டை விட்டு பெற்ற தந்தையை அடித்து விரட்டிய மகன்கள் திருவாரூர் கலெக்டரிடம் கண்ணீர்மல்க மனு

திருவாரூர், மே 7: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பெற்ற மகன்கள் மூவரும்  தன்னை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டதாக விவசாயி ஒருவர் கலெக்டரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி கோவிந்தராஜ் (65). இவரது மனைவி  மேகலா  உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து விட்ட நிலையில் தனது மகன்கள் உதயகுமார், மணிகண்டன், ரமேஷ் ஆகிய மூவருக்கும் கோவிந்தராஜன் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்து தன்னிடம் இருந்த 8 ஏக்கர் விவசாய நிலத்தையும் சரிசமமாக மூவருக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது சொத்து முழுவதும் தங்களது கைக்கு வந்து விட்ட நிலையில் தந்தை என்று கூட பார்க்காமல் மகன்கள் மற்றும் மருமகள்கள் என அனைவரும் சேர்ந்து கோவிந்தராஜை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நன்னிலம் போலீசார் மற்றும் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் கடந்த  பல மாதங்களாக கோவிந்தராஜ் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் என்று  பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வந்த நிலையில் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து கலெக்டர் ஆனந்திடம் மனு அளித்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Tags : sons ,house ,Thiruvarur Collector ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...