கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

பொன்னமராவதி, மே 7: பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடந்தது. தமிழகத்தில் பருவமழை பெய்து நாடு செழிக்க  இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் யாகம் நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று 4ம் தேதி காலை முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியவை மூலமாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நாதஸ்வரம், தவில் ஆகியவை மூலம் மழைக்கான ராகங்கள் வாசதிக்கப்பட்டு சிறப்பு வேள்வி மற்றும் யாகம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் கோயில் முன்புள்ள குளத்தில் மழைவேண்டி தண்ணீரில் நின்று வழிபாடு நடத்தப்பட்டது. இதில் கோயில் செயல்அலுவலர் வைரவன், பூஜகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED கோயிலை உடைத்து கொள்ளை முயற்சி