×

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வால்பாறை, மே 7:  வால்பாறையை அடுத்து உள்ள அய்யர்பாடி எஸ்டேட் 2ம் பிரிவு துவக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து, முன்னாள் தலைமையாசிரியர் காளியப்பன், முன்னாள் மாணவர் பேராசிரியர் குரூஸ் ஆகியோர்  குத்துவிளக்கு ஏற்றி  துவக்கி வைத்தனா். இந்த நிகழ்ச்சி முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிவரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 40-60 வயதினர் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்றனா். பல ஆண்டுகளுக்கு பின் தங்கள் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது மகிழ்ச்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். விழா ஒருங்கிணைப்பாளா–்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனா்.3 நாட்கள் நடைபெற்ற  விழாவில் தற்போதைய மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

Tags : Meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...