×

கோவை கலெக்டர் அலுவலகம் முன் போலீஸ் ரோந்து வாகனம் பழுது

கோவை, மே 7: கோவை கலெக்டர் அலுவலகம் முன் போலீஸ் ரோந்து வாகனம் பழுதானதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.கோவை கலெக்டர் அலுவலகத்தில் தினமும் ஏராளமான பொதுமக்களும், வட்ட அளவிலான அதிகாரிகளும் அலுவல் பணிக்காக வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.  நேற்று ரேஸ்கோர்ஸ் எஸ்.ஐ ரமேஷ் தலைமையில் 5க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் வரை பணியில் இருந்த போலீசார் பின் கிளம்ப முயன்றனர். அப்போது அவர்கள் வந்த டிஎன் 38ஜி 875 பதிவெண் கொண்ட வாகனம் பழுதாகி நடுரோடில் நின்றது.இதனால் செய்வதறியாது திகைத்த போலீசார் வாகனத்தை தள்ளி ஓரமாக நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags : office ,Collector Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்