×

மத்தளம்பாறையில் சந்தன மாரியம்மன் கோயில் கொடைவிழா

நெல்லை, மே 7:  மத்தளம்பாறை இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன் கோயில் கொடைவிழா, கடந்த 4ம் தேதி தொடங்கியது. அன்றிரவு 8 மணிக்கு அண்ணாமலை குழுவினரின் கும்மிப்பாட்டு, 5ம் தேதி மதியம் 12 மணிக்கு மும்பை குரூப்ஸ் சார்பில் அன்னதானம், இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கும்மிபாட்டு நடந்தது. நேற்று (6ம் தேதி) மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இன்று (7ம் தேதி) மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு சாமகால பூஜையும், அதிகாலை 1 மணிக்கு சப்பரம் வீதிஉலா வருதலும் நடக்கிறது. நாளை (8ம் தேதி) காலை 8 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு மஞ்சள் நீராடுதல், காலை 11 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை மத்தளம்பாறை இந்து நாடார் சமுதாயத்தினர் செய்துள்ளனர்.


Tags : festival ,Chandana Mariamman Koil ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...