ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் கலந்தாய்வு தேதி மாற்றம்

கடையம், மே 7: ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் 2019-20ம்  ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான அரசு நிதி உதவிபெறும் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு தேதி மாற்றி அமைக்கபட்டுள்ளது. இதன்படி இளம் வணிகவியல் (பி.காம்) பாடப்பிரிவுக்கு 16ம் தேதி காலை 9 மணிக்கும், இளம் அறிவியல் (பி.எஸ்சி), இளம் கணிதம், இளம் இயற்பியல், இளம் வேதியியல் மற்றும்  இளம் விலங்கியல் ஆகிய பிரிவுகளுக்கு 17ம் தேதி காலை 9 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பிளஸ்1 தேர்ச்சி பெற்ற சான்றிதழையும் கொண்டு வர வேண்டும். இத்தகவலை கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தெரிவித்து உள்ளார்.

Tags : Alwararkurichi College ,
× RELATED கடையத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டுவைப்பு