×

வேதாரண்யம் தாலுகா பகுதியில் கஜா புயலால் கடல்நீர் புகுந்து பாதித்த நிலங்களை சீரமைக்க செயல்விளக்கம்

வேதாரண்யம், மே 7: வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் கடற்கரை கிராமங்களில் கடல் நீர்புகுந்து பாதிக்கப்பட்ட விளை நிலங்களை சீரமைப்பதற்கான பணிகளை சென்னையை சேர்ந்த இன்ஸ்பயர் நிறுவனமும், இன்போசிஸ் பவுன்டேசன்  நிறுவனமும் மேற்கொண்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் வௌ்ளப்பள்ளம் புயல் பாதுகாப்பு கட்டிடத்தில் இன்ஸ்பயர் நிறுவன பொறுப்பாளர் ரேவதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவில் மீனவர் கிராமங்களான  வௌ்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, புஷ்பவனம், கோவில்பத்து உட்பட பல்வேறு கடற்கரை கிராமங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் போது கடல் நீர் உள்ளே புகுந்த விளை நிலங்களை சீரழித்து உவர் நிலமாக மாற்றியது, இந்நிலையில் சென்னை இன்ஸ்பயர் நிறுவனமும், இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து உப்பு தன்மை கொண்ட, உவர் நிலமாக மாறிய நிலங்களை சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றக் கூடிய ஆலோசனைகளையும், மண் சோதனை உப்பு படிகங்களை அகற்றுதல், நிலங்களை கோடையில் உழவு செய்தல், உப்பு தன்மை அகற்றும் காவால பூண்டு செடி நடுதல் உள்ளிட்ட சிறப்பு ஆய்வுகளையும் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான வழிமுறைகளை விவசாயிகளிடம் எடுத்து கூறினர்.

    மேலும் விவசாயிகளுக்கு கத்தரி, வெண்டை, புடலை உள்ளிட்ட 9 வகையான காய்கறி விதைகளையும் வழங்கினர். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடற்கரை கிராமங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆயிரம் புதிய குளங்களை வெட்டவும், தூர்ந்து போன குளங்களை மறு சீரமைத்து தூர் வாரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, மேலும் கடற்கரை கிராமங்களில் 1லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகளை நட இருப்பதாகவும் இன்ஸ்பயர் நிறுவன ரேவதி தெரிவித்தார்.


Tags : Demonstration ,land ,area ,Vedaranyam Taluk ,storm ,Ghazi ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!