×

கரூர் அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை 4,493 விண்ணப்பங்கள் விற்பனை

கரூர், மே. 7: கரூர் அரசுக் கல்லூரி சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் இதுவரை 4493 விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், பிசி, எம்பிசி படிவங்கள் 3252ம், எஸ்சி, எஸ்டி படிவங்கள் 1241 என்பது குறிப்பிடத்தக்கது.விற்பனை செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களில் 3200 விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்சி மாணவர்கள் மட்டும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கல்லூரி அலுவலகத்தில் மே 13ம்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Karur ,Government college ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...