×

குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா

குளித்தலை மே 7: கரூர் மாவட்டம் குளித்தலையில் மிகவும் பிரசித்தி பெற்ற  மகாமாரியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் பூச்சொரிதல் மற்றும் கம்பம் நடும் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது விழாவையொட்டி குளித்தலை நகரத்தில் மணத்தட்டை நாப்பாளையம், வைகநல்லூர் அக்ரஹாரம், அண்ணாநகர், உழவர்சந்தை, பாரதிநகர், பஜனைமடம், பேராளம்மன் கோவில் தெரு, காவல்காரத்தெரு, கீழக்கொடிக்கால் தெரு, கொள்ளம்பட்டறை தெரு, மலையப்ப நகர், பள்ளிவாசல் தெரு, பெரியார் நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் ஏராளமான அலங்கார வண்டிகளுடன் அம்மனை அலங்கரித்து, பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டையுடன் முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து இறுதியாக மாரியம்மன் கோயிலையடைந்து அனைத்து பூக்களையும் படைத்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி சுகுமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர்  ஈடுபட்டு இருந்தனர்.

 இவ்விழாவினை தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படிதாரர்கள் மாரியம்மனை வைத்து அபிஷேகம் செய்து இரவு தேரோடும் வீதியில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும். மே.12ம் தேதி மாலை உற்சவ மாரியம்மன் கடம்பர் கோயிலில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். 19ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை முக்கிய நிகழ்வான பெரியபால்குடம், அன்றிரவு அரண்மனை மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 21ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. மதியம் 2.30 மணிக்குமேல் பூக்குழி இறங்கும் விழா நடைபெறும். மே.23ம் தேதி  அம்மன் முத்து பல்லக்கில் வீதிஉலா நடைபெறுகிறது. 24ம் தேதி காலை மஞ்சள் நீராட்டும் விழா, மாலை 6 மணிக்கு மேல் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags : Cambum ,planting ceremony ,bathroom ,Maha Mariamman ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்...