×

குண்டும், குழியுமான வடக்கு காந்தி கிராம சாலை சீரமைக்க வலியுறுத்தல்

கரூர், மே 7: கரூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு காந்திகிராமம் பாரதியார் தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் ராமானு£ர் பகுதியில் இருந்து இபி காலனி வழியாக காந்திகிராமம் செல்லும் சாலை உள்ளது. இதில், இபி காலனிக்கு முன்னதாக, பாரதியார் தெருச் சாலை உள்ளது. இந்த தெருவினை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரதியார் தெருச் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக ஜல்லிக் கற்கள் பரவிக் கிடக்கிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாலையின் வழியாக பல்வேறு தெருக்களுக்கு சாலை பிரிவதால் அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே, அதிகாரிகள் இந்த சாலையை பெயர்த்து, புதிதாக தார்ச்சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்


Tags : pit ,Kunda ,Northern Gandhi Rural Road ,
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...