×

மகாமாரியம்மன் கோயில் திருவிழா குளித்தலை காவிரி ஆற்றுப்பகுதியில் செயற்கை நீரூற்று அமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை மே 7:  குளித்தலை மகாமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காவிரி ஆற்றுப்பகுதியில் செயற்கை நீருற்று அமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை மகாமாரியம்மன் கோயில் திருவிழாவினை யொட்டி கடந்த 5ம் தேதி கம்பம் நடுவிழா, பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்நிலையை தொடர்ந்து 15 நாட்கள் திருவிழா நடைபெறும்.   தற்போது காவிரி நதிக்கரையில் நீராடி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் பயன்படும் வகையில் குளித்தலை நகராட்சி சார்பில் கடம்பன் துறை, மணத்தட்டை, ஹய்ஸ்கூல் துறை, பெரியபாலம் பாிசல் துறை ஆகிய 4 இடங்களில் சென்ற ஆண்டு ஆழ்குழாய் அமைத்து செயற்கை நீரூற்று பக்தர்கள் பயன்படுத்தும் வகையில்  அமைக்கப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் பக்தர்கள் வசதிக்காக செயற்கை நீரூற்று ஏற்படுத்தி தர வேண்டும் எனபக்தர்கள்,  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mahamayarman ,Cauvery ,temple festivities ,fountain ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...