கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் நற்கருணை பவனி

கோவில்பட்டி, மே 7: கோவில்பட்டியில் புனிதசூசையப்பர் ஆலய திருவிழாவையொட்டி நடந்த நற்கருணை பவனியில் திரளானோர் பங்கேற்றனர். கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  திருவிழா நாட்களில் தினமும் மாலை திருப்பலி, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 10ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு ஜெரால்டு ரவி, ஆலய பங்குத்தந்தையும், கோவில்பட்டி வட்டார அதிபருமான அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை மிக்கேல் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றினர்.

 மாலை 6 மணிக்கு கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாளை புனித அந்தோணியார் திருத்தல அதிபர் ஆண்டோ, நாலாங்கட்டளை புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் ஜெகன்ராஜா, ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை மிக்கேல் சேது சபை கல்வித்துறை கண்காணிப்பாளர் மாசிலாமணி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். பின்னர் அங்கிருந்து நற்கருணை பவனி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணை வைக்கப்பட்டு வெண்ணிற ஆடையணிந்த சிறுவர், சிறுமியர் பூக்களை தூவியவாறு இறைமக்கள் இறைபாடல்களை பாடியவாறு    பவனியாக புதுரோடு வழியாக புனித சூசையப்பர் ஆலயத்தை சென்றடைந்தனர். பின்னர் ஆலயத்தில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.


× RELATED கொடைக்கானல் அருகே பரபரப்பு: மரக்கன்று நடும் விழா