×

கோவில்பட்டி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவில்பட்டி, மே 7: கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் முன்னாள்  மாணவர்கள் சந்திப்பு நடந்தது. கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் கடந்த 1995- 98ம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நடந்தது. முன்னாள் ஆசிரியர் துரைராஜ் தலைமை வகித்தார். முன்னாள் பேராசிரியர் திருவேங்கடராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணசாமி வரவேற்றார். கடந்த 1995-98ம் ஆண்டுகளில் பயின்ற மாணவ, மாணவிகள் குடும்பத்துடன் பங்கேற்றதோடு மலரும் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர்.  பின்னர் அனைவரும் குரூப் புகைப்படம் எடுத்து கொண்டனர். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Alumni meeting ,Kovilpatti College ,
× RELATED மாநில ‘‘மைக்ரோபிஸ்ட்டா 2024’’ போட்டி கோவில்பட்டி கல்லூரி மாணவர்கள் சாதனை