×

நாசரேத் தூய யோவான் பேராலய பிரதிஷ்டை விழா மே 9ல் துவக்கம்

நாசரேத், மே 7:  நாசரேத்தில் தூய யோவான் பேராலய பிரதிஷ்டை விழா மற்றும் அசன பண்டிகை நாளை மறுதினம் (9ம் தேதி)  துவங்குகிறது.  தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி  - நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் 91வது பரதிஷ்டை  விழா மற்றும் அசன பண்டிகை நாளை மறுதினம் (9ம் தேதி) துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. 9ம் தேதி மாலை 4 மணிக்கு பேராலய வாலிபர் ஐக்கிய சங்க விளையாட்டு போட்டி நடக்கிறது. மாலை 7.30 மணிக்கு வேதாகமத்தில் விசுவாசத்தில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றத்தை கிறிஸ்டியாநகரம் குருவானவர் ஜாண் சாமுவேல் நடுவராக இருந்து நடத்துகிறார்.

 வரும் 10ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாசரேத் குடும்ப உபவாச கூடுகை நடக்கிறது. மாலை 7 மணிக்கு பிரதிஷ்டை விழிப்பாராதனை, பாடகர்குழு சிறப்பு பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது.  தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் சிறப்பு செய்தி அளிக்கிறார். தொடர்ந்து வாண வேடிக்கையும், ஐக்கிய விருந்தும் நடக்கிறது. 11ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு பிரதிஷ்டை ஆராதனை, திருவிருந்து ஆராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு அசன விருந்து  நடக்கிறது. ஏற்பாடுகளை தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், அசனகமிட்டி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மர்காஷிஸ், செயலாளர் செல்லக்குமார், இணைச்செயலாளர் கோயில்பிச்சை, பொருளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், சேகர செயலாளர் மர்காஷிஸ், பொருளாளர் எலியேசர், சபை ஊழியர்கள் ஜெபஸ்டின், ரொனால்டு, சேகர எழுத்தர் அகஸ்டின் மற்றும் சேகர, அசன கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Natraj Patriarchal Festival ,
× RELATED இன்றும், நாளையும் நடக்கிறது தூத்துக்குடியில் பேரின்ப பெருவிழா