×

ஒவ்வொரு தனி நபர் மீது ₹53 ஆயிரம் கடனை சுட்டிக்காட்டி நெற்றியில் பட்டை கட்டி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் செய்யாறில் பரபரப்பு


செய்யாறு, மே 7: ஒவ்வொரு தனி நபர் மீதும் ₹53 ஆயிரம் கடன் உள்ளதை சுட்டி காட்டிடும் வகையில் செய்யாறில் நேற்று விவசாயிகள் நெற்றியில் பட்டை கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செய்யாறு தாலுகா அலுவலகம் எதிரில் விவசாயிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் திரண்டு ஒவ்வொரு தனி நபர் மீதும் ₹53 ஆயிரம் கடன் உள்ளதை சுட்டி காட்டும் வகையில் நெற்றியில் வெள்ளை நிற பட்டை கட்டி கொண்டு பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.அப்போது அவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பே லோக் ஆயுக்தா அமைந்திருந்தால் தமிழக அரசு வருடத்திற்கு ₹33 ஆயிரத்து 500 கோடி வட்டி கட்டும் நிலை உருவாகி இருக்காது என்றும், லஞ்சம் பெறுபவர்கள் மீது வழக்கு நிரூபணமானால் தூக்கு தண்டனை, மனைவி வழி, மகன் வழி, மகள் வழி, தாய் வழி, தந்தை வழி சொத்துக்கள் பறிமுதல், தேசத்துரோகத்திற்கு வழக்குப்பதிந்து நடவடிக்கை என்ற கருத்தை வரவேற்கின்றோம்.

மேலும், 1984ல் நில உடமை மேம்பாட்டு திட்டத்தில் சில தவறுகள் உள்ள நிலையில் மேலும் பல தவறுகளை திருத்தம் செய்திருக்கிறது. இதனால் 72 லட்சம் பட்டா நிலவுடைமையில் பிரதமர் விவசாய நிதி திட்டம் சுமார் 30 லட்சம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளது.
எனவே, நில உடமை மேம்பாடு மீண்டும் புதுப்பிக்க வேண்டும். 1994 வறுமைக்கோடு பட்டியல் 2019 நலத்திட்டங்களுக்கு பயனாகிறது. வருவாய்த்துறை ஆண்டுக்கு ஒருமுறை வருமான சான்று புதுப்பிக்கின்ற நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பட்டியலில் திருத்தம் செய்தல் வேண்டும். மேலும், மக்களின் வரி பணத்தில் வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பெற மனித உழைப்பு, பண இழப்பு, கை மாற்றம், மன உளைச்சல், இடைத்தரகர்கள் உள்ளதை ஐநா அறிக்கை குறிப்பிடுவதை கருத்தில் கொண்டு நேரடியாக பணம் வழங்க வேண்டும்.தேர்தலில் வாக்களிக்க 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு விடுமுறையுடன் சம்பளம் வேண்டும். இதை, தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கூறப்பட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி மதுரைக் கிளை உயர் நீதிமன்றத்திற்கு விவசாயிகள் கோரிக்கை மனு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.


Tags : individual ,
× RELATED 10ம் வகுப்பு தேர்வுசிவகங்கையில் 17,867 பேர் எழுதினர்: 301 பேர் ஆப்சென்ட்