×

ஆத்தூரில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் 17 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

ஆத்தூர், மே 3: ஆத்தூரில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வந்ததை அடுத்து 17 இடங்களில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு மேட்டூர் ஆத்து£ர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மஞ்சள் நிறத்துடன் குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக ஆத்தூர், நரசிங்கபுரம், அம்மம்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் புகார் கூறினர். இதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, மாவட்ட கலெக்டர் ரோகிணி சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை செயலாளரிடம் பொதுமக்களின் குற்றச்சாட்டினை கூறி உடனடியாக தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை குடிநீர் பாகுப்பாய்வு வல்லுனர் டாக்டர் கோபால் தலைமையில் உதவி தலைமை குடிநீர் பாகுப்பாய்வு வல்லுனர் பராபர செந்தில், சேலம் மண்டல குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராஜ், உதவி நிர்வாக பொறியாளர்கள் மோகன்தாஸ், ஜெய்சங்கர், உதவி பொறியாளர் நித்யா உள்ளிட்ட குழுவினர் மேட்டூர்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின்,

தொடக்க பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து காலை 8 மணியளவில் குடிநீரை பிடித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆத்தூர் நகராட்சி பகுதி வரை 17 இடங்களில் அதிகாரிகள் குழுவினர் குடிநீரை ஆய்வு செய்தனர். இறுதியாக 8வது வார்டு லட்சுமிபுரம் பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களின் முன்னிலையில் ஆய்வு செய்து காண்பித்தனர். இதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறியதாவது: கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீர்பாகுப்பாய்பு வல்லுனர் டாக்டர் கோபால் தலைமையிலான குழுவினர் நேற்று ஆத்து£ர் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்து பார்த்தனர். இந்த ஆய்வில் அமோனியா, பாஸ்பரஸ், நைட்ரேட், இருப்பு சத்து, அமில மற்றும் கார தன்மைகள் குறித்து நேரடி ஆய்வு செய்யப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாத து£ய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவது உறுதிபடுத்தப்பட்டது என தெரிவித்தனர்.

Tags : places ,Athur ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...