×

பத்தாம் வகுப்பு தேர்வில் ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளி சாதனை

ராசிபுரம், மே 3: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ராசிபுரம் வித்யா நிகேதன் மற்றும் வித்யா நிகேதன் இண்டல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி  சுவேதா 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.  ஜோதிகா 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், அகல்யா 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். பள்ளியில் 480 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 450க்கு மேல் 14 பேரும், 400க்கு மேல் 16 பேரும் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த  மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : Rasipuram Vidhya Niketan Matriculation ,class examination ,
× RELATED மதுரவாயலில் லாரி மோதி மாணவன் பலி