×

ஜேஇஇ மெயின் தேர்வில்  வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை

ஊத்தங்கரை, மே 3: ஜேஇஇ மெயின் தேர்வில் ஊத்தங்கரை  வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தொழில்கல்வி பயில்வதற்கான ஜே.இ.இ. மெயின் தேர்வில், ஊத்தங்கரை  வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி லோகதர்ஷினி 91.29 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், மாணவர்கள் ராகவன் 89.71, கிஷோர்குமார் 82.90, மாணவிகள் நட்சத்ரா 82.74, பிரசன்னஜோதி 80.61 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சந்திரசேகரன், முதல்வர் சரவணகுமார், துணை முதல்வர்கள் சிவநேசன், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி பேசினர்.  

Tags : Vidhya Mandir ,examination ,
× RELATED நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து...