×

போச்சம்பள்ளியில் மாநில கபடி போட்டியில் சேலம் அணி வெற்றி

போச்சம்பள்ளி, மே 3:  போச்சம்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சேலம் அணி முதலிடம் பிடித்தது. போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாநில அளவிலான கபடி போட்டி  நடந்தது. இதில் வேலூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. மின்னொளியில் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இறுதி சுற்றுக்கு 3 அணிகள் தேர்வானது. இதில் சேலம் அணி முதல் பரிசும், மொரப்பூர் அணி 2ம் பரிசும், ஜோலார்பேட்டை அணி 3ம் பரிசும் தட்டிச் சென்றன. மேலும், பல்வேறு பிரிவுகளில் பல மாவட்ட அணிகள் பரிசு பெற்றன.

Tags : team ,Salem ,state kabaddi tournament ,Pochampalli ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...