×

பொ.மல்லாபுரம் அருகே கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு

பாப்பிரெட்டிப்பட்டி, மே 3: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூரு, ேவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள், பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் அமைந்துள்ள சாக்கடை கால்வாயில், அடைப்பு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க ேவண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : watershed ,Mollapuram ,
× RELATED முல்லை பெரியாறு நீர்மட்டம் சரிவு அதல...