×

நாகர்கோவில் இந்து கல்லூரியில் செயல்படுகிறது இன்ஜினியரிங் கவுன்சிலிங் மையத்தில் விண்ணப்ப பதிவு தொடங்கியது மாணவ, மாணவியர் குவிந்தனர்

நாகர்கோவில், மே 3: நாகர்கோவில், கோணத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இன்ஜினியரிங் கவுன்சிலிங் மையம் நாகர்கோவில், இந்து கல்லூரிக்கு மாற்றப்பட்டு விண்ணப்ப பதிவு ேநற்று தொடங்கியது.தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம், சுயநிதி பொறியியல்
கல்லூரிகள் ஆகியவற்றில் 2019-2020ம் கல்வியாண்டில் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலாமாண்டு பி.இ மற்றும் பி.டெக் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2019 க்கான கலந்தாய்வுக்கு நேற்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தல் தொடங்கியுள்ளது.

12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஆன்லைன் மற்றும் வங்கிகள் மூலமாக தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம். வங்கிகள் மூலம் பதிவுக்கட்டணம் செலுத்துவோர் ‘The Secretary, TNEA’ Payable at Chennai, என்ற பெயரில் 01.05.2019 க்கு பிறகு பெற்ற வரைவோலை மூலமாக பதிவுக்கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக சமர்ப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (TNEA) சென்னையில் மட்டும் நடைபெறும். ஆன்லைனில், www.tneaonline.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

விண்ணப்பதாரரின் பெயர், இமெயில் ஐடி, தொலைபேசி எண், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான வேண்டுதல், பதிவுக்கட்டணம், ஆதார் விவரங்கள், பெற்றோர் ஆண்டு வருமானம், பள்ளி விவரங்கள், 12ம் வகுப்பு தேர்வு எண், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவை விண்ணப்பிக்க அவசியம் ஆகும். மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, www.tneaonline.in என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.

குமரி மாவட்ட மாணவர்கள் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இனி சென்னை செல்ல தேவையில்லை. நாகர்கோவில் இந்து கல்லூரியில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையம் (TNEA 2019 TFC) அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 மையங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு விண்ணப்பம் பதிவு செய்தல், சான்றிதழ் சரிபார்த்தல், விரும்பிய கல்லூரியை தேர்ந்தெடுத்தல் (Online Counselling) ஆகிய அனைத்தையும் செய்து கொள்ளலாம். விண்ணப்ப பதிவு 31-05-2019 வரை நடைபெறும். நாகர்கோவில், கோணத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் செயல்படுவதால் இந்து கல்லூரிக்கு இந்த மையம் மாற்றப்பட்டுள்ளது என்று அதன் பார்வையாளர் ஜாண் தெரிவித்தார்.

விண்ணப்பிக்க சேவை கட்டணம் என்று கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. பதிவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஏராளமான மாணவ மாணவியர் இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு வருகை தந்து விண்ணப்பம் பதிவு செய்யும் பணிகளை தொடங்கினர்.
தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங்- 2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்    :    02.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்    :    31.05.2019
ரேண்டம் எண் வெளியிடும் நாள்    :    03.06.2019
சேவை மையம் வாயிலாக அசல் சான்றிதழ்
சரிபார்த்தல்                             : 6.6.2019 - 11.06.2019
தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்    :    17.06.2019
மாற்றுத்திறனாளி கவுன்சிலிங்    :    20.6.2019
முன்னாள் படைவீரர் கவுன்சிலிங்    :    21.6.2019
விளையாட்டு வீரர் கவுன்சிலிங்    :    22.6.2019
தொழில்முறை கல்வி நேரில் கவுன்சிலிங்
துவங்கும் நாள்    :    25.06.2019
தொழில்முறை கல்வி நேரில் கவுன்சிலிங்
முடியும் நாள்    :    28.06.2019
பொதுகலந்தாய்வு ஆன்லைனில்
துவங்கும் நாள்    :    03.07.2019
பொதுகலந்தாய்வு ஆன்லைனில் முடியும் நாள்    : 28.07.2019
துணை கலந்தாய்வு நேரடியாக    :    29.07.2019
எஸ்சிஏ, எஸ்சி கவுன்சிலிங் நேரடியாக    :    30.7.2019
ஒட்டுமொத்த கலந்தாய்வு முடியும் நாள்    :    30.07.2019

Tags : Nagarcoil ,Hindu College ,Engineering Counseling Center ,
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...