×

துவரங்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதி செல் கடைக்காரர் பலி

மணப்பாறை, மே 3:  துவரங்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதி செல்போன் கடை உரிமையாளர் பலியானார். திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ஜவஹர்(42). இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி அருகேயுள்ள காயல்பட்டினத்திற்கு காரில் சென்றபோது, துவரங்குறிச்சியை அடுத்த அதிகாரம் என்ற இடத்தில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் ஜவஹர் சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த காசிம் லேசான காயத்துடன் தப்பினார். தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜவஹர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.

Tags : car crash ,trucker ,downtown ,lorry ,
× RELATED வாகன விபத்தில் டிரைவர் பலி