×

மே5ல் ரம்ஜான் மாத முதல் நோன்பு துவக்கம் மாவட்ட ஹாஜி தகவல்

திருச்சி, மே 3: திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், மாவட்ட அரசு காஜியுமான ஜலீல் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கை:
 வரும் 5ம் தேதி ஷபான் பிறை 29 மாலை மகரிப் தொழுகையுடன் ரம்ஜான் முதல் பிறையுடன் (முதல் நோன்பு) ரம்ஜான் மாதம் ஆரம்பமாகிறது. இது தொடர்பாக திருச்சி பெரிய கடை வீதி பேகம் சாஹேபா பள்ளிவாசல் வளாகத்தில் ஹிலால் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. மாநகர மாவட்ட ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள், சங்கைக்குரிய உலமா பெருமக்கள், முக்கிய சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டு பிறை செய்தியை அறிந்து நோன்பு தொடர்பாக அறிவிப்பு செய்வார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் அனைவரும் தங்களது பள்ளிவாசல் நிர்வாகம் சகிதமாக பிறை தகவல்களை அறிந்து ஹிலால் கமிட்டிக்கு முறையாக செய்தி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ramzan ,District Haji ,
× RELATED கலெக்டர் தகவல் வலங்கைமான் அருகே விஷமருந்தி வாலிபர் தற்கொலை