×

சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் இன்று கடைசி நாள்

பெரம்பலூர், மே 3:  ஜூன் மாதம் நடைபெறும் தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: ஜூன் மாதம் நடைபெறவுள்ள தொடக்க கல்வி பட்டய தேர்வுகள் ஜூன் 14ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. தனித்தேர்வர்களாக முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தொடக்க கல்வி பட்டய தேர்வெழுத ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலவரையறைக்குள் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் www.dge. tn.gov.in என்ற இணையதள வழி விண்ணப்பத்தையும், பக்கம் 1முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் இன்று (3ம் தேதி) தேர்வரே நேரில் அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு கட்டணத்துடன் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000யை கூடுதலாக செலுத்த வேண்டும். தேர்வு கட்டணங்களாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ்  (முதலாமாண்டு) ரூ.100ம், மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000, பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ15, ஆன்லைன் பதிவு கட்டணம் (ஒரு விண்ணப்பத்துக்கு) ரூ.50 செலுத்த வேண்டும். இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Individuals ,chart selection ,
× RELATED அரசு புறம்போக்கு நிலத்தை...