×

வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின் நிலையங்களில் மின் தடை

திருப்பூர், மே 3:திருப்பூர் வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(4ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் மின் பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(4ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வீரபாண்டி துணைமின் நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதுார், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ. நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர், டி.கே.டி. மில் மற்றும் இதனை சார்ந்தபகுதிகள்.
ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு, ஜீவா நகர், சின்னியகவுண்டன் புதுார், கே.என்.எஸ். நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே. காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் மற்றும் இதனைசார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Veerapandi ,Andipalayam ,
× RELATED நீர்வரத்து குறைந்தபோதும் வீரபாண்டி முல்லையாற்றில் குவியும் பயணிகள்