×

மே தின விடுமுறையில் சுற்றுலா பயணிகள் குறைவு

ஊட்டி, மே 3: மே தின விடுமுறை வார நாட்களில் வந்த நிலையில், ஒரு நாள் மட்டுமே விடுமுறை கிடைத்ததால் இம்முறை கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. மே 1ம் தேதி தொழிலாளர் விடுமுறை என்பதால், அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதில் திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் மற்றும் கோவை போன்ற பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் அதிகளவு வருவார்கள். இதனால், அனைத்து சாலைகளிலும் போக்குரவத்து ஸ்தம்பிக்கும். ேமலும், வார விடுமுறை நாளை ஒட்டி வந்தால், தொடர்ந்து மூன்று நாட்கள் ஊட்டியில் கூட்டம் அலைமோதும். ஆனால், இம்முறை புதன்கிழமை 1ம் தேதி வந்த நிலையில் ஒரு நாள் மட்டுமே தொழிலாளர்களுக்கு விடுமுறை இருந்ததால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தே காணப்பட்டது.

Tags : holiday ,May Day ,
× RELATED மஹாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் விடுமுறை