பாலக்காடு திப்புசுல்தான் கோட்டை பார்க்க நுழைவுக்கட்டணம் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு

பாலக்காடு, மே 3: பாலக்காடு திப்புசுல்தான் கோட்டைக்குள் செல்வதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பதற்கு கேரள காங்கிரஸ் பிரதேஷ் கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேரணி நடந்தது. பாலக்காடு திப்புசுல்தான் கோட்டை தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த கோட்டைக்குள் சப்-ஜெயில், பாலக்காடு மாவட்ட உணவுதானியம் வழங்கல் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆஞ்சநேயர் கோயிலும் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், வந்து செல்கின்றனர்.

சப்-ஜெயிலில் அடைத்து வைத்திருக்கும் கைதிகளை பார்க்க அவர்களது குடும்பத்தினர் வந்து செல்கின்றனர். மாவட்ட உணவுத்தானிய வழங்கல் அலுவலக தேவைகளுக்கு அதிகப்படியான ஆட்கள் வந்து செல்கின்றனர்.  ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இவர்களிடம் நுழைவுக்கட்டணம் மே மாதம் முதல் தேதி முதல் தலா ரூ.25 வசூலிக்க தொல்லியல் துறையினர் தீர்மானித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி அமைப்பின் தலைவர் உமேஷ் அச்சுதன் தலைமையில் பேரணி நேற்று நடத்தினர். இந்த பேரணியில் ஏராளமான காங்கிரஸ் இளைஞர் அணியினரும் பங்கேற்றிருந்தனர்.

Related Stories: