×

வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் பணி தீவிரம்

தேனி, மே 3: தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற மே 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்க உள்ளது. விழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். பகல், இரவு என நாள் முழுவதும் நடக்கும் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சாமிகும்பிட்ட பின்னர், குடும்பத்துடன் குதூகளிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் பொழுது போக்கு அம்சங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இதில் சிறுவர்கள், குழந்தைகள் குதூகளிக்கும் வகையில் பல்வேறு வகையான ராட்டினங்கள், பேன்சி கடைகள், மாயாஜால வித்தைகள் மற்றும் சர்க்கஸ் நடத்தப்படுவது வழக்கம். இத்திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள நிலையில் தற்போது கோயிலுக்கு அங்கபிரதட்சனம், ஆயிரம் கண்பானை எடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. எனவே, பொழுதுபோக்கு அம்சங்கள் நடத்துவோர் வட மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட ராட்டினங்கள், மாயாஜால வித்தைகள் என பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Activation ,festival ,Veerapandi Chaitra ,
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு