அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே அனல் காற்றுடன் கடுமையான வெயில்

சிவகங்கை, மே 3: சிவகங்கை மாவட்டத்தில் அனல் காற்றுடன் கடுமையான வெயில் அடித்து வருவதால் முதியோர், குழந்தைகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாமை, காலம் தவறிய பருவ மழை உள்ளிட்டவைகளால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. மார்ச் முதல் ஜுன் வரை வெயில் இருந்தாலும் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டுமே கடுமையான வெயில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே கடுமையான வெயில் அடிக்க தொடங்கியது. அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. அதன் பிறகே காற்றில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளது. மார்ச் முதல் ஜுன் வரை வெயில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வெயிலோடு அனல் காற்றும் வீசுவதால் அனைவரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். முதியோர், குழந்தைகள் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அக்னி நட்சத்திர காலத்தில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. வெயிலுடன், அனல் காற்றும் வீசுவதால் காலை மாலை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் நகர்ப்பகுதிகள், பிரதான சாலைகள் கூட ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் கூறியதாவது, முந்தைய ஆண்டுகளில் நவம்பர், டிசம்பரில் பெய்யும் மழை நீர் கோடை காலம் வரை இருக்கும். இதனால் வெயிலின் தாக்கம் தெரியாது. இந்த ஆண்டு இதுவரை கோடை மழை தொடங்கவில்லை. இதனால் கடுமையான வெப்பம் உள்ளது. எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறோம் என தெரியவில்லை. மழை பெய்தால் மட்டுமே வெப்பம் குறையும் என்றனர்.

* விகாரி வருடம் சித்திரை மாதம் 20ம் நாள், வெள்ளிக்கிழமை, தேய்பிறை.
* திதி: சதுர்த்தசி மறுநாள் பின்னிரவு 4.50 மணி வரை; அதன் பிறகு அமாவாசை. நட்சத்திரம்: ரேவதி பிற்பகல் 3.13 மணி வரை; அதன் பிறகு அஸ்வினி.
* யோகம்: அமிர்தயோகம்.
* நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
* ராகு காலம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
* எமகண்டம்: மாலை 3.00 முதல் 4.30 மணி வரை.

Tags : start ,Agni ,
× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை